அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

tamilni 245

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் இருந்த அலுவலகங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு நீதி வழங்க தாம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version