24 6600cf9bd72fd
இலங்கைசெய்திகள்

அரசாங்க நிர்வாக அதிகாரிகளுக்கு 100,000 கொடுப்பனவு

Share

அரசாங்க நிர்வாக அதிகாரிகளுக்கு 100,000 கொடுப்பனவு

அரச சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை உயர் பெறுமதியால் அதிகரிக்க முடியுமானால் அரச ஊழியர்களின் சம்பளத்தை மாத்திரம் ஏன் அதிகரிக்க முடியாது என அந்த சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

முழு பொது சேவையிலுள்ள பதின்மூன்றாயிரம் நிர்வாக தர அதிகாரிகளுக்கு பதினைந்தாயிரம் ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு பொது நிர்வாக அமைச்சு அமைச்சரவைக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி, 2020 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்ட போதிலும், அரசிடம் பணம் இல்லை எனக் கூறி அது இரத்து செய்யப்பட்டது.

இவ்வாறான பின்னணியிலே தற்போது மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புடன், அரச சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான்...

images 2
செய்திகள்இந்தியா

இந்தியத் தொழிலதிபர் மகனின் ஆடம்பரத் திருமணம் இலங்கையில்: சுற்றுலாத் துறைக்கு ரூ.35 மில்லியன் வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு!

இந்தியாவின் பிரபலத் தொழிலதிபரான மோகன் சுரேஷ் தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை நடத்த இலங்கையைத்...

The earthquake in Uttarkashi occurred around 5km b 1694420274586 1701495114647
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் 24 மணிநேரத்துக்குள் மீண்டும் நிலநடுக்கம்: 3.3 ரிக்டர் அளவில் பதிவு!

பங்களாதேஷ் நாட்டில் 24 மணி நேரத்துக்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவின்...

articles2FdhDDZcYNvXEcbQ3844QF
உலகம்செய்திகள்

வியட்நாம் வெள்ளத்தில் 55 பேர் பலி: 52 ஆயிரம் வீடுகள் மூழ்கின; 32 இலட்சம் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன!

வியட்நாமில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக...