இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் கட்சிகள் இலங்கையில் இல்லை! லால்காந்த

Share
21 5
Share

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் கட்சிகள் இலங்கையில் இல்லை! லால்காந்த

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எட்டாகப் பிளவுபட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இல்லாமல் போய்விட்டது.

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதி மக்களும் திசைகாட்டி சுற்றித் திரண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாவலப்பிட்டி தொகுதி மகிந்தானந்த அளுத்கமவின் கோட்டையாக மாறியிருந்த நிலையில், அந்த கோட்டையை உடைத்து ஜனாதிபதி தேர்தலில் நாவலப்பிட்டி தொகுதியை வெற்றிபெற நாவலப்பிட்டி பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது ஜனாதிபதி உட்பட இரண்டு அமைச்சர்கள் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு செயற்பட்டு வருவதாகவும், பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்களை அமைச்சுக்களுக்கு நியமித்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் லால்காந்த இதன்போது உறுதியளித்தார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...