சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவிக்கு போட்டி

tamilni 195

சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவிக்கு போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்காக அந்தக் கட்சியில் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகின்றதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும், தான் கட்சியை விட்டுப் போகப்போவதில்லை என்றும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கைப்பற்றுவதற்காகத் தொடர்ந்து போராடப் போவதாகவும் தயாசிறி கூறியுள்ளார்.

தயாசிறிக்கு ஆதரவாக கட்சிக்குள் ஓர் அணி கிளம்பியுள்ளது. அதற்குத் திலங்க சுமதிபால தலைமை தாங்குகின்றார்.

பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் தயாசிறிக்குப் பெற்றுக்கொடுக்கும் வரை போராட்டம் ஓயாது என்று திலங்க சுமதிபால தலைமையிலான அணியினர் கூறியுள்ளனர்.

Exit mobile version