இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியல் பரிதாபங்கள் – மன வேதனையில் பல அரசியல்வாதிகள்

Share
20 5
Share

தென்னிலங்கை அரசியல் பரிதாபங்கள் – மன வேதனையில் பல அரசியல்வாதிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக ஏராளமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தென்னிலங்கை அரசியல் பரிதாபங்கள் – மன வேதனையில் பல அரசியல்வாதிகள்அநாதைகளாக மாறியுள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்நிலையில், ஏராளமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் அநாதைகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்நது.

இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா வன்னியாராச்சி, குருநாகலை சேர்ந்த தயாசிறி ஜயசேகர, பேராசிரியர் சரித ஹேரத், காலியைச் சேர்ந்த ஷான் விஜேலால், அனுராதபுரத்தைச் சேர்ந்த எஸ்.எம்.சந்திரேசேன மற்றும் பல முன்னாள் பிரமுகர்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, தலதா அத்துகோரள, நிமல் லன்சா, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் இறுதி நேரத்தில் என்ன முடிவை எடுப்பார்கள் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என சுமார் 60 முன்னாள் அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் வழமைக்கு மாறாக பாரம்பரிய கட்சிகள் பிளவுபட்டு அரசியல் தளத்தில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல பழம்பெரும் கட்சிகள் தமது சொந்த சின்னங்களை கைவிட்டு மாற்று சின்னங்களில் மக்கள் மத்தியில் செல்ல வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களை மக்களை ஏமாற்றிய பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் இன்று மக்கள் முன்னிலையில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்குப் போவதாக சூளுரைத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் உள்ளார்.

இதன் காரணமாக ஊழல் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் தமது அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்ல அச்சப்படுகின்றனர். அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.

இதனைக் கருத்திற்கு கொண்டு பல அரசியல் தலைவர்கள் அரசியல் இருந்து விலகவும் தீர்மானித்துள்ளனர். சிலர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கடந்த ஆட்சிகளின் போது ஊழலில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டரீரியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...