3 18
இலங்கைசெய்திகள்

நாட்டின் இளம் சமூகத்தினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

நாட்டின் இளம் சமூகத்தினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்வி வேலை தேடுவதற்காக அல்ல, வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும் மற்றும் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற டிப்ளோமா வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,” இலங்கையின் கல்விப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவு தொடர்பான விடயதானங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழில்முனைவு பற்றிய கல்வியை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனாலேயே இந்த சமூகம் முன்னேறவில்லை. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த கல்வி வேலை தேடுவதற்காக அல்ல, வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும், வேலைகளை உருவாக்க வேண்டும்.

இதுதான் நாட்டுக்கு தேவை, இதை பற்றி பேச வேண்டும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து தொழில்முனைவோராகுங்கள்.

இந்த தொழில்முனைவோர் கருத்தை சமூகமயமாக்க நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன்.

பாரம்பரியத்திற்கு புறம்பாக எப்படி சிந்திப்பது? ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவா? வித்தியாசமாக சிந்திக்கவா? அப்படி நினைப்பதனூடாக இலக்குகளை அடைய முடியுமென நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...