14 25
இலங்கைசெய்திகள்

அநுரவிடம் மக்களின் எதிர்பார்ப்பு தோல்வி! சாடும் முன்னாள் எம்.பி

Share

அநுரவிடம் மக்களின் எதிர்பார்ப்பு தோல்வி! சாடும் முன்னாள் எம்.பி

புதிய அரசாங்கம் தொடர்பான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாய்ச்சொல் வீரரே தவிர, செயல் வீரரல்ல என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம்.

நாட்டு மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது.

ஒரு இலட்சத்துக்கு 45 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தொடர்கிறது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை.

இதனால் தான் சில்லறை அரிசி வர்த்தகர்கள் அரிசியை கொள்வனவு செய்ய முன்வருவதில்லை. அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதால் கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகிறது.

விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இம்முறை பொங்கல் பொங்குவதற்கும் பச்சையரிசி இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 20 கிலோ கிராம் அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால் தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் சிறுபிள்ளைத் தனமாக குறிப்பிடுகிறது.

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது.

கோட்டபய ராஜபக்ச சேதன பசளைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை போன்று க்ளீன் சிறிலங்கா செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...