இணைய வழியில் ஏலம்: இலங்கை சுங்கத்திற்கு அறிவுறுத்தல்

24 662b2edd0010a

இணைய வழியில் ஏலம்: இலங்கை சுங்கத்திற்கு அறிவுறுத்தல்

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இணைய வழியின் மூலம் ஏலங்களை நடத்துமாறு இலங்கை சுங்கத்திற்கு (Sri Lanka Customs) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 25, 2024 முதல் இணைய வழி ஏலத்தை நடைமுறைப்படுத்துமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தமானியில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) நேற்று (25.04.2024) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக இணைய ஏலத்தை இதுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று கூறிய அவர், தற்போது இலங்கை சுங்கத்தின் அனைத்து ஏலங்களையும் இணையத்தில் நடத்துவதற்கு சுங்கத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய முறையின் மூலம் அரசாங்கத்திற்கு முறையான வருமானத்தை பெற்றுக் கொடுப்பதுடன் தங்கம் உள்ளிட்ட பொருட்களை போட்டி விலையில் பெற்றுக் கொள்வதற்கான திறந்த உரிமையை மக்களுக்கு வழங்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version