தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் பாலினப் பங்கீடு மற்றும் வயதுக் குழுவின் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பாலினப் பங்கீடுநாட்டின் மொத்த சனத்தொகையில் பெண்களின் சதவீதம் ஆண்களின் சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.பாலினமக்கள் தொகையில் பெண்கள்51.7%, ஆண்கள்48.3% வீதமாகப் பதிவாகியுள்ளது.
சிறுவர் சனத்தொகை குறைவுஇந்த அறிக்கையில், 15 வயதுக்குட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு சிறார்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 25.2 வீதமாக இருந்தது.2024 ஆம் ஆண்டு: இந்தச் சிறார்களின் எண்ணிக்கை 20.7 வீதமாகப் பதிவாகியுள்ளது.இது, 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.5 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

