rtjy 205 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் தரப்பின் ஆசை

Share

ரணில் தரப்பின் ஆசை

இலங்கையானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று வர வேண்டும் என்பதே தற்போது பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாகவுள்ளது.

அவ்வாறெனில் நிச்சயம் நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் போலி செய்திகளைப் பரப்பும் சமூக வலைத்தளங்களையும், இன, மத மோதல்களைத் தூண்டும் சமூக வலைத்தளங்களையும் கட்டுப்படுத்துவதற்கேயன்றி பிரதான ஊடகங்களை முடக்குவதற்கானதல்ல என்றும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக போலி செய்திகள் மிகத் துரிதமாக சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றன.அது மாத்திரமின்றி இன மற்றும் மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களுக்கூடாகவே அதிகளவில் பரப்பப்படுகின்றன.

எனவே இவ்வாறான செய்திகளைப் பரப்பும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டியது தேசிய தேவை என்பதுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புசட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.

இலங்கையானது சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைப் போன்று வர வேண்டும் என்று இன்று பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பான சட்ட திட்டங்கள் மிகக் கடுமையானவையாகவே உள்ளன. ஆனால் நாம் அந்தளவுக்கு சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...