இலங்கை மக்கள் எதிர்காலத்தில் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றன மக்களை பெரும் ஆபத்தை நோக்கி தள்ளியுள்ளது.
ஆளும் கட்சியினரின் விரோத போக்கினை தட்டிக் கேட்கவும், தடுத்து நிறுத்தவும் உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மக்களின் கைகளுக்கு அதிகாரம் வரக்கூடியதாக மக்கள் சார்பான பரந்துபட்ட சக்திகள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்பதையே சரியான தீர்வுக்கான வழியாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment