tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Share

இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

வாதுவ பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள், பேஸ்புக் மற்றும் இணையம் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான இராணுவ சிப்பாயை பொலிஸ் தலைமையகத்தின் போலி அடையாள அட்டை மூலம் அச்சுறுத்தி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரகம, மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மசாஜ் நிலையங்கள், பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட பெண்களை வாதுவ, மொரொன்துடுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகராக இருப்பதாக போலியான அடையாள அட்டையை காட்டி பெண்களின் தங்க நகைகளை சந்தேக நபர் திருடியதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரால் களவாடப்பட்ட தங்க நகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபா, கையடக்கத் தொலைபேசி மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டை என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...