image 2025 11 29 200615910 1200x675 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹங்குரான்கெத்தையில் மனிதாபிமான செயல்: மண்சரிவில் சிக்கிய 5.3 மில்லியன் ரூபாய் உடைமைகளை மீட்ட இராணுவம்!

Share

ஹங்குரான்கெத்த பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவப் படையினர், மண்சரிவால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்து சுமார் 5.3 மில்லியன் ரூபாய் (53 இலட்சம்) மதிப்புள்ள தனிப்பட்ட உடைமைகளை மீட்டு, அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஹங்குரான்கெத்தை பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி, வீடு முற்றிலுமாக அழிந்திருந்த ஒரு வீட்டு உரிமையாளருக்கே இந்த மதிப்புமிக்க உடைமைகள் மீட்டுக் கொடுக்கப்பட்டன.

துப்புரவு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​பாதிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளிலிருந்து இராணுவத்தினர் பின்வரும் பொருட்களை மீட்டனர். டத்தப்பட்ட துப்புரவு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​பாதிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளில் இருந்து சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ரூ. 300,000 ரொக்க பணத்தைபடையினர் மீட்டனர்.

அனர்த்த காலத்தில் இராணுவம் மேற்கொண்டுள்ள இந்தப் பொறுப்புணர்வு மற்றும் மனிதாபிமான செயல்பாடு பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...