ஊழல் மோசடிகளை ஆராய விசேட விசாரணைப் பிரிவு : ஹரினி அறிவிப்பு

24 66fa80666a93b

ஊழல் மோசடிகளை ஆராய விசேட விசாரணைப் பிரிவு : ஹரினி அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஆங்கில் செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உறுதி செய்யும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கை மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் முன்னேறும் அதே வேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதிலும் கவனம் செலுத்தவுள்ளது.

மேலும், இடையூறு இல்லாத, சுமூகமான மாற்றத்தை தேசிய மக்கள் சக்தி விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version