பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை

tamilni 376

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

குறித்த விசேட போக்குவரத்து சேவையினை நாளை (22.12.2023) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்வுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.

Exit mobile version