24 661eb1e8adc70
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி

Share

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி

இலங்கையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 100 பேருக்கு இந்த விசேட துப்பாக்கிச் சூட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதியில் இந்த நாட்டிலிருந்து போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Tamil News lrg 4098065
இந்தியாசெய்திகள்

விமானப் பணி விதிமுறைகள் சிக்கல்: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு – பிப்ரவரி வரை தாமதம் நீடிக்க வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து...

1739443473 archuna
இலங்கைசெய்திகள்

சிங்களப் போர் வீரரால் காப்பாற்றப்பட்டேன்: இராமனாதன் அர்ச்சுனா – பாதுகாப்புப் படையினருக்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, வெள்ளத்தில் சிக்கியிருந்த தன்னைச் போர் வீரர்கள் காப்பாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

srilankaflood 532067014
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றம்: அரசாங்கம் கவனம்!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான...

1734575149 1
இலங்கைசெய்திகள்

சீனாவின் அவசர நிதியுதவிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி!

அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இலங்கைக்குச் சீனா வழங்கிய நிதியுதவி மற்றும் தாராளமான ஆதரவிற்காகச்...