24 667228d79b455
இலங்கைசெய்திகள்

நாட்டில் தீவிரபடுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்

Share

நாட்டில் தீவிரபடுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்

இவ்வருட பொசன் பண்டிகைக்காக சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி பொசன் பண்டிகை நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் சுமார் ஆறாயிரம் பொசோன் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் மேல்மாகாணத்தில் உள்ள விகாரைகளில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கென சுமார் 19062 பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 370 பேரும், முப்படையைச் சேர்ந்த 607 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...