14 24
இலங்கைசெய்திகள்

தேவாலயங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

Share

தேவாலயங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க(Buddika Manatunga) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தந்த பொலிஸ் பகுதிகளில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுவார்கள்.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை பொலிஸார் நாடுவார்கள். இதேவேளை, பண்டிகைக் காலங்களில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் சாரதிகளை பரிசோதிக்க விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான பாதுகாப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளில் குற்றச் செயல்களைக் கண்காணித்து அடையாளம் காண்பதற்காக 500க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடை அணிந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...