28
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

Share

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த பின்னர் அனைத்து வேட்பாளர்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த குழு திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினை காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரின் அனைத்து அதிகாரங்களையும் செயலாளர் வியானி குணதிலக்கவிடம் பொது பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அதன்படி தேர்தல் காலத்தில் பொலிஸ் மா அதிபர் பிறப்பிக்கும் உத்தரவுகள், தேர்தல் கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல், கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்தல், போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தேவையான பணம் செலுத்துதல் போன்றவை செயலாளரால் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...

25 69020d87ab94b
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு: போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின்...