நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு

24 6614ca3f824d5

நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 5,580 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இது தவிர, 510 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 1,260 ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version