இலங்கைசெய்திகள்

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் மர்ம கும்பல்

24 6615ec8cb1232
Share

கொழும்பு உட்பட மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் மர்ம கும்பல்

மேல் மாகாணத்தில் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கைத்துப்பாக்கிகள் கொண்ட விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு களமிறங்கவுள்ளது.

இந்த குழுவினர் விசேட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மேற்பார்வையில் விசேட பயிற்சி பெறும் இந்தக் குழுவினர் விசேட தாக்குதல் மோட்டார் சைக்கிள் அணியாக வரவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு உடனடி பதிலடி கொடுப்பதற்காக இந்தக் குழுக்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், குழுவிற்கு விசேட சீருடைகளும் வழங்கப்படும் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் திறமையான அதிகாரிகளை இந்தப் பிரிவில் இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மோட்டார் சைக்கிள் தாக்குதல் குழுக்கள் ஆரம்ப கட்டமாக கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பிரிவுகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...