சதோச விற்பனை நிலையம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் 50 பொருட்களுக்கு விலை குறைத்து விற்பனை செய்ய உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக அரிசி போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பண்டிகைக் காலங்களில் தளர்த்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நாணய கையிருப்பு பற்றாக்குறையால் பால்மா தட்டுப்பாட்டுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment