ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த விசேட அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்றைய தினம் (04.08.2023) அறிவித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த (ஜூலை) 26ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.
இதன்போது, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழு நாட்டையும் பாதிக்கும் விடயம் என்பதால், அனைத்துக் கட்சிகளுடனும் இது குறித்து விவாதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பான முடிவெடுப்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்டி, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.