15 28
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

Share

பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது எதிர்வரும் சனிக்கிழமை (28) தேர்தல் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கிடைத்த அனுபவம், பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும் அடுத்த பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்வதற்கான ஒழுங்கு விதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் குறித்து அன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...