tamilnaadi 88 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா அவசர சந்திப்பு

Share

யாழில் எம்.பிக்கள் புத்திஜீவிகளுடன் இரவோடு இரவாக இந்தியா அவசர சந்திப்பு

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிய இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவ‍ேளை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.சந்தோஷ் ஜாவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அரசியல் பிரமுகர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு இந்திய அரசாங்கமானது 500 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இருநாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பை வலுவாக எதிர்ப்பதான கருத்தை இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் பகிரங்கமாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இந்தியாவுடனான விசேட உறவில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு தாம் முன்வந்துள்ளதாக சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இந்தியாவின் புதிய தூதுவருடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பானது ஆரோக்கியமாக அமைந்தது எனவும் கூறினார்.

இலங்கையை பூகோள அரசியல் ரீதியில் பார்க்காமல் இந்தியாவை போன்று தமிழ் மக்கள் மீதும் கரிசனையுடன் சர்வதேசம் செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இலங்கை அரசியலானது பாரதூரமான விளைவுகளை சந்திக்கக்கூடும்.

மேலும், சர்வதேச சமூகமானது பூகோள அரசியல் என்ற போர்வையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை பேசாவிட்டாலும் கூட கிடைக்கும் சந்தர்ப்பங்களின் எங்களது கோரிக்கைகளை பதிவு செய்யவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. என்றார்

Share
தொடர்புடையது
licence 1200px 2023 10 18
செய்திகள்இலங்கை

ஓட்டுநர் உரிமக் கட்டணத் திருத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்கள், சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில்...

image 9f55943f1b 1
செய்திகள்இலங்கை

“மயானத்திலிருந்து மக்கள் சேவையா..!”: சஜித் பிரேமதாசவின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது....

image f4517ddf89 1
செய்திகள்இலங்கை

‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமையில் இருந்தபோது மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர்...

sachin tendulkar virat kohli sportstiger 1694859677789 original
விளையாட்டுசெய்திகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி – உலக சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சர்வதேச ஒருநாள் (ODI) மற்றும் ரி20...