ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி

rtjy 124

ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி

தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்க வேண்டிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவு முதல் தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததற்கமைய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் தொடருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version