9 2
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணி: ரணிலுக்கு வலுக்கும் பெரும் ஆதரவு

Share

ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணி: ரணிலுக்கு வலுக்கும் பெரும் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேக ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் அரசியல் மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

ராஜபக்ச இல்லாத கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 60க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இணைய உள்ளதாக கலந்து கொண்ட எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புதிய கூட்டணியின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு மூன்று அரசியல் தலைவர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்திற்குள் அரசியலமைப்பு கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
=
அதன் பிறகு அரசியல் கட்சியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...