3 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திரக் குழு

Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திரக் குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்தத் தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும், உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எவ்வாறாயினும் பொறுப்புக்கூறும் விடயத்தைப் பிரதிபலிக்கக்கூடிய நேர்மையான அறிக்கையைக் கூடிய விரைவில் அரசாங்கம் முன்வைக்கவுள்ளது.

இந்த அறிக்கையானது ஜெனிவாவுக்குப் பதிலளிப்பதாக அல்லாது எமது அரசின் நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசின் வெளிப்படைத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே எமது சிறப்பு அறிக்கை அமையும். இதற்காக இலங்கையின் விசேட இராஜதந்திரக் குழு செயற்படும்” என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...