நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், உயிர் தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை அத்திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார்.
கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – 077 125 0461
கிளிநொச்சி மாவட்டம்: எம்.ராகவன் – 077 625 7977
யாழ்ப்பாணம் மாவட்டம்: வித்தியா நமசிவாயம் – 077 537 4464
முல்லைத்தீவு மாவட்டம்: எஸ்.தமிழ்செல்வன் – 077 358 0720
மன்னார் மாவட்டம்: ரேமன் – 076 649 9107
பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான சிகிச்சைகளைத் துரிதப்படுத்தவும், இழப்பீட்டு மதிப்பீடுகள் மற்றும் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் இந்த இலக்கங்களைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.