அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்!

tamilni 150

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்!

அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்கு விசேட முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 4,000 ரூபா முற்பணமாக வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முன்பணம் ஜனவரி முதலாம் திகதி முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளது.

திறைசேரியின் உடன்படிக்கையின் படி, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.

இந்த முற்பணத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் திரும்பப்பெற வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version