இலங்கையில் ஆபத்தான இடமாக மாறியுள்ள தென் மாகாணம்

21 15

இலங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இரண்டாவது மாகாணமாக தென் மாகாணம் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குற்றங்களுக்கான காரணங்களை ஆராய ஒரு அறிவியல் ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியை ருஹுணு பல்கலைக்கழகம் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சியின் மூலம் குற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பந்து ஹரிச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையில் அதிக குற்றச்செயல்கள் இடம்பெறும் மாகாணமாக மேல் மாகாணம் பதிவாகி உள்ளது. பாதுகாப்புக் குழுவில், குற்றங்களுக்கு காரணமான சமூகப் பிரச்சினைகளை ஆராய அறிவியல் ஆராய்ச்சி நடத்த முடிவு செய்தோம்.

போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் குற்றங்களுக்கு காரணமா? நில அபகரிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

குற்றங்கள், குற்ற இடங்கள் மற்றும் நீதிமன்ற தண்டனை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள் பொலிஸாரிடம் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version