24 662742da992e6 scaled
இலங்கைசெய்திகள்

கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால்

Share

கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால்

யாழில் (Jaffna) இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைந்துள்ளார்.

கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நினைவாலயமானது, யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்து இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன.

அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.

இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்றுமுழுதாக யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளது.

தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆலயங்களின் கட்டடக் கலைகளை உள்ளடக்கியே இந்த நினைவாலயம் அமைக்கப்பெற்றுள்ளது.

அண்மைக் காலங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வன்முறைகள், முரண்பாடுகள் தோற்றம்பெற்று வரும் நிலையில், தந்தைக்காக மகன் கட்டிய இந்த நினைவாலயமானது அடுத்தகட்ட சந்ததியை நல்வழிப்படுத்துவதற்கான முன்னுதாரணமாக உள்ளது.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...