மொட்டு கட்சியின் வேட்பாளர் தொடர்பில் விசேட கவனம்

tamilni 113

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களாக முன்னிறுத்த ஆறு பேர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, தம்மிக்க பெரேரா, மற்றும் மேலும் இருவர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவில்லை. மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவே இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version