மொட்டுவின் வேட்பாளரை பகிரங்கமாக அறிவிப்போம்

rtjy 156

மொட்டுவின் வேட்பாளரை பகிரங்கமாக அறிவிப்போம்

மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தங்கத்துக்கு ஏன் அதிக விலை? மாணிக்கம், முத்துகளுக்கு ஏன் மதிப்பு? அவை வீதியில் கொட்டிக் கிடந்தால் கருங்கல்லுக்குரிய மதிப்பே கிட்டும்.

எனவே, மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரும் பெறுமதிமிக்கவர், பதற்றப்பட வேண்டாம், உரிய நேரத்தில் அறிவிப்பு வரும்.

அரசியலில் நிராகரிப்பு என்பது நிரந்தரம் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணம் இதற்குச் சிறந்த சான்று” என்றார்

Exit mobile version