1 5 scaled
இலங்கைசெய்திகள்

பங்காளிகளைத் தக்கவைக்க மொட்டு கடும் பிரயத்தனம்

Share

பங்காளிகளைத் தக்கவைக்க மொட்டு கடும் பிரயத்தனம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபர் பஸில் ராஜபக்ஷவுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரம் குறித்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேல் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மொட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலேயே அந்தச் சந்திப்பில் பிரதமர் பங்கேற்றார்.

மஹஜன எக்சத் பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடியும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

மொட்டுக் கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த சுமார் ஏழு பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலேயே, தமது கட்சியின் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காத பிரதமரின் கட்சியுடன் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...