rtjy 363 scaled
இலங்கைசெய்திகள்

வரவு – செலவு திட்டம் குறித்து மொட்டு இன்னும் முடிவு இல்லை

Share

வரவு – செலவு திட்டம் குறித்து மொட்டு இன்னும் முடிவு இல்லை

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் கட்சியாகவே இறுதியான – உறுதியான முடிவு எடுக்கப்படும்” என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் வாக்குக் கேட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, பின்னர் சுயாதீனமானவர்களே கட்சி மீது கல்லெறிகின்றனர்.

இது பற்றி நாம் பதற்றம் அடையவில்லை. அந்தக் கற்களை வைத்து பாதை அமைத்து பயணிப்போம். எமது பயணம் மெதுவானதாக இருக்கலாம்.

ஆனால், இலக்கு நோக்கியது. தற்போது கல்லெறிபவர்கள் அப்போது பார்வையாளர்களாக மாறுவார்கள். அவர்களுக்குப் பெரிய சவால் அல்ல, சிறியதொரு சவாலை விடுக்கின்றேன், முடிந்தால் அடுத்துவரும் ஏதேனும் ஒரு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுங்கள்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...