4 16
இலங்கைசெய்திகள்

ஆளும் கட்சியிலுள்ள ஊழல்வாதிகளை அம்பலப்படுத்த தயார் : மொட்டு விடுத்துள்ள சவால்

Share

அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான காமினி லொகுகே குற்றம் (Gamini Lokuge) சுமத்தியுள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தவர்களின் விபரங்களை வெளியிடும் பெண்டோரா பேபர்ஸ் (Pandora Papers) ஆவணங்களில் இலங்கை ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களின் பெயர்கள் இந்த ஆவணத்தில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நபர்கள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தாம் அம்பலப்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களின் சொத்துக்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தாம் அம்பலப்படுத்த உள்ளதாக காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் வெளியிட்டதன் பின்னர் அரசாங்கம் குறித்த நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு விடயம் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ள தாங்கள் தயார் எனவும் காமினி லொகுகே தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...