மகிந்த அமைக்கும் இரகசிய வியூகம் : அநுர அரசுக்கு விழப்போகும் பேரிடி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் (SLPP) ஒரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (11.02.2025) காலை நடைபெற்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) மற்றும் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) ஆகியோரின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதமும் இது போன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன் போது போது, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த கலந்துரையாடல் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.