24 6611e51e73b34
இலங்கைசெய்திகள்

சுதந்திர கட்சிக்கு எதிராக சந்திரிக்கா சூழ்ச்சி செய்வதாக குற்றச்சாட்டு

Share

சுதந்திர கட்சிக்கு எதிராக சந்திரிக்கா சூழ்ச்சி செய்வதாக குற்றச்சாட்டு

ஶ்ரீங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

சுதந்திரக் கட்சியை அரசாங்கத்துடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப் பதவியில் நீடிப்பதனை தடுக்க நீதிமன்றின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சதி திட்டத்தின் பின்னணியில் சந்திரிக்கா செயற்பட்டு வருவதாக மைத்திரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மீண்டும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்து உண்மை நிலைமையை நீதிமன்றில் எடுத்துரைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...