24 66403cac2b009
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களின் வழியாக இடம்பெறும் மோசடி

Share

சமூக ஊடகங்களின் வழியாக இடம்பெறும் மோசடி

சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களை வெளியிட்டு பயனாளிகளின் வங்கி விபரங்களை திருடி பணமோசடி செய்வது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இதுவரை 03 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோபொல தெரிவித்துள்ளார்.

பயனர்கள் சில விளம்பரங்களைக் கிளிக் செய்யும் போது, அவர்கள் வேறொரு தகவலுக்குத் திருப்பிவிடப்பட்டு, இந்த வங்கி விபரத்திருட்டு மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

புதிய செயலி ஒன்றை பதிவிறக்கக்கூறி, விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களின் தொடர்புடைய கொள்வனவை மையப்படுத்தி இந்த மோசடி இடம்பெறுகிறது.

பயனர்கள் புதிய செயலியை கையாள்வதை தொடர்ந்தால், பயனர்களின் கையடக்கத்தொலைபேசியின் கட்டுப்பாடு மூன்றாம் தரப்பினரின் (மோசடிக்காரர்களின்) கைகளுக்கு செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மோசடியாளர் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வார் என்று இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT) எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 693893d136522 md
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிவாரண உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு: சிறப்பு விமானம் இலங்கை வந்தடைந்தது!

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கவிருந்த நிதியுதவியை 2.35 மில்லியன்...

25 67b7115c55e73
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சிம் கார்டுகள் வழங்கியதாக கைதான நபருக்கு பிணை!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரைப் பிணையில் விடுவிக்க கொழும்பு...

25 694147cfc9dd2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்டைதீவு புதைகுழி விவகாரம்: பொலிஸ் அறிக்கையை தட்டச்சு வடிவில் சமர்ப்பிக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில், பொலிஸார் சமர்ப்பித்த கையால் எழுதப்பட்ட அறிக்கையைத் தட்டச்சு...

115171512 110522371 gettyimages 903375720 1
இந்தியாசெய்திகள்

இரத்த மாற்று சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், சாட்னா (Satna) மாவட்ட மருத்துவமனையில் தலசீமியா நோய்க்காக இரத்த மாற்று...