tamilnih 90 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள்

Share

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள்

இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை தெரிவி்த்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு இந்த டிஜிட்டல் வீசா வழங்கப்பட உள்ளது.

முதலீட்டாளர்கள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரையில் இலங்கையில் தங்கியிருப்பதற்காக வீசா வழங்கப்பட உள்ளது.

மேலும் இலங்கையில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க விரும்புவோருக்கு நிரந்தர வீசா வழங்கப்பட உள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகள் வீசா பெற்றுக்கொள்வதினை இலகுவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வீசா நடைமுறைகளை இலகுபடுத்துவதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்கள் வீசா பெற்றுக் கொள்வதனை இலகுபடுத்தும் நோக்கில் வவுனியாவில் பெப்ரவரி மாதம் காரியாலயமொன்று திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...