19 31
இலங்கைசெய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் மூடப்படவுள்ள வீதிகள்

Share

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகைப் பணிகள் குறித்து கொழும்பு (Colombo) போக்குவரத்து பிரிவு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த ஒத்திகை நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒத்திகை இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2025.01.29 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.01.30 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.01.31 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.02.01 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.02.02 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட திகதிகளில் மூடப்படவுள்ள வீதிகளின் விபரம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

கருவாதோட்டம் விஜயராம மாவத்தையில் கல்லுாரி மாவத்தை திசைக்கு நுழைதல்.

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு நுழைதல்.

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை திசைக்கு நுழைதல்.

கருவாதோட்டம் ஸ்டென்லி விஜயசுந்தர மாவத்தையில் இருந்து மன்றக்கல்லுாரி வீதி திசைக்கு நுழைதல்.

கருவாதோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்க திசைக்கு நுழைதல்.

ஆகிய வீதிகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...