3 40
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளின் வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் திட்டம்

Share

அரசியல்வாதிகளின் வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் திட்டம்

கடந்த அரசாங்கங்களின் போது முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நண்பர்கள் பயன்படுத்திய பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விற்பனை செய்வது அல்லது பொது ஏலத்தில் விற்று பணத்தை திறைசேரிக்கு வரவு வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, நீண்டகாலமாக அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக முன்கெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்துடன் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், செயலாளர்கள், அரச அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்திய பெருந்தொகையான சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த சொகுசு வாகனங்கள் அனைத்தும் கடந்த அரசாங்கங்களின் போது அரசியல்வாதிகள், செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நண்பர்களினால் பயன்படுத்தப்பட்டவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனைத்து சொகுசு வாகனங்களுக்கும் எரிபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி செயலகம் ஊடாக பணம் செலவிட்டிருந்தது.

5 கோடி முதல் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொகுசு வாகனங்கள், அரசியல்வாதிகளால் நீண்ட காலமாக முறைசாரா வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்யவும் அல்லது வெளிநாட்டிற்கு பொது ஏலத்தில் விற்று, பொது நலனுக்காக திறைசேரிக்கு பணத்தை வைப்பிடவும் அரசின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...