எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன : மனுஷ நாணயக்கார பகிரங்கம்

24 668a6521bedc1

எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன : மனுஷ நாணயக்கார பகிரங்கம்

இலங்கை எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் “நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.

எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும்போது கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளால் தான் கொழும்பு துறைமுகத்தின் (Colombo Port) கிழக்கு முனையம் போன்ற ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டமும் எதிர்க்கப்பட்டது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Kumaratunga) அதிபராக இருந்த போது, மொனாஷ் பல்கலைக்கழகம் (Monash University) இலங்கைக்கு வந்தது. ஆனால் தனியார் கல்வியை அனுமதிக்க முடியாது என்று கூறி அப்போது அனுமதிக்கப்படவில்லை.

அந்த பல்கலைக்கழகம் மலேசியாவுக்கு (Malaysia) கொண்டு செல்லப்பட்டது. இன்று அது மலேசியா பிராந்தியத்தில் ஒரு கல்வி மையமாக மாறியுள்ளது, இது பில்லியன் கணக்கான டொலர்களை வருவாயை ஈட்டுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் (JVP) செயற்பாடுகள் இவ்வாறு தொடர்ந்தால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது“ என அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Exit mobile version