ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்

tamilnaadi 132

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்

நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக மற்றுமொரு தெற்கு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது கிடைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சக்தியும், ஒழங்கமைப்பு வலையமைப்பும் கொண்ட கட்சிகள் இரண்டு மட்டுமே இலங்கையில் உள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி எனவும் மற்றையது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்பொழுது நாட்டை ஆட்சி செய்யக்கூடிய தலைவராக ரணில் விக்ரமசிங்க மட்டுமே இருக்கின்றார்.

இந்த நிலைமைகளின் கீழ் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை.

Exit mobile version