இலங்கைசெய்திகள்

சஜித் அணியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

6 43
Share

சஜித் அணியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய மனோ கணேசன் (Mano Ganesan), நிசாம் காரியப்பர் (Nisam Kariyappar), சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe), மொஹமட் இஸ்மாயில் (Mohamed Ismail) ஆகியோர் நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளின் படி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலாநிதி ஜகத் விக்ரரத்னவின் (Jagath Wickramarathne) பெயர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், எதிர்க்கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஹினி கவிரத்னவின் (Rohini Kavirathna) பெயரை பரிந்துரைக்க எதிர்க்கட்சி தயாராகி வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தேசியப் பட்டியல் உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்த நிலையில் ஏனைய நால்வரின் பெயரும் கடந்த 12ஆம் திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...