இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் உள்ள இராணுவ நினைவுச் சின்னத்தை அகற்றுங்கள் – சிறீதரன் எம்.பி கோரிக்கை

Share

தமிழர் பகுதியில் உள்ள இராணுவ நினைவுச் சின்னத்தை அகற்றுங்கள் – சிறீதரன் எம்.பி கோரிக்கை

கிளிநொச்சி (Kilinochchi) டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், ”கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஒரு இராணுவ நினனைவுச் சின்னம் உள்ளது. டிப்போவிற்கு பின்னால் இரண்டு ஏக்கர் காணி இராணுவத்தின் வசமுள்ளது.

தற்போது பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனால் (P. Chandrasekaran) மிகப்பெரிய கலாசார மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவம் தான் இடித்து அழித்தது.

கிளிநொச்சி டிப்போவிற்கு பின்னால் உள்ள காணியின் இரண்டு ஏக்கர் நிலத்தை மாவட்ட செயலகத்தின் ஊடாக பெற்று, இராணுவ சின்னம் அகற்றப்பட்டு அதில் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் பெயரில் ஒரு கலாசார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த நகரப் பகுதிக்குள் இவ்வாறு காணிகள் இராணுவத்திற்கு தேவையில்லை” என தெரிவித்தார்.

இந்த நிலையில் அதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர், “காணி உரிமை கோருபவர்களது மத்தியில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்ற நிலையில் கிராம சேவகர்கள் உண்மையான காணி உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியும்“ என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...