tamilni 42 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு

Share

தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற முதலாம் ஆண்டு மாணவராவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலான செய்தி வெளியாகியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவானது இன்றையதினம் அவரது குடும்பத்தினரிடம் தொடர்பை மேற்கொண்டபோது மேற்கண்ட விடயங்கள் உறுதிசெய்யப்பட்டது.

மேலும் தெரியவருகையில்,

சம்பத்தினமான கடந்த 31.08.2023 அன்று குறித்த மாணவன் காணாமல் போன நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அவரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.

எனினும் அவரது தொலைபேசி செயற்பட்டதாகவும் எவ்வித மறு அழைப்பும் உறவினருக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிரித்துள்ளனர்.

இதன்பின்னர் விசாரணையின் ஓர் அங்கமாக மாணவன் சென்ற இடங்கள் தொடர்பான சிசிரீவி காணொளியை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.

இதற்கமைய குறித்த மாணவன், கொழும்பில் உள்ள தனியார் விடுதியொன்றின் அறையை முன்பதிவுசெய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், உயிரிழந்த மாணவனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மாணவன் கல்குடா வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...