25 6838fd7061a94
இலங்கைசெய்திகள்

துசிதவை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு! திரைக்கதை எழுதியவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Share

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவ மற்றும் சட்டத்தரணி தினேஷ் தொடங்கொட ஆகியோர் பயணித்த ஜீப்பின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கோப்புகளை திருடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் மற்றும் அவர் பயணித்த வாடகை மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளரும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர்.

இந்நிலையில் குறித்த விசாரணை தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி…

“ஜீப்பில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தாக்குதல் நடத்தச் சொன்னார்கள். நாங்கள் அப்படிச் செய்தோம். எனக்கு எந்தக் கோப்பும் பற்றி எதுவும் தெரியாது,” என்று தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர் ஒருவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

பாதுகாப்பு கண்காணிப்பு கருவிகளை ஆய்வு செய்தபோதும், கோப்பு திருடப்பட்டது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும், துபாயை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு பாதாள உலக குற்றவாளியால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்கசூட்டுக்கு காரணமான பாதாள உலகக் குற்றவாளியின் தந்தை ஒரு உள்ளூர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர்.

அவர் நாட்டின் மிக நீண்ட காலமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நாடகமாகக் கருதப்படும் கோபிகடே என்ற தொலைக்காட்சி நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடும் ஒரு தொலைக்காட்சி நாடகத்தைப் போன்றது. விரைவில் திரைக்கதை எழுதி இயக்கிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

துபாயில் உள்ள பாதாள குழு உறுப்பினரின் வழிகாட்டுதலின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வங்கிக் கணக்கில் 200,000 ரூபா வரவு வைக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்டர்போலின் உதவியுடன் விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...