1
இலங்கைசெய்திகள்

தேங்காயின் விலை குறைவடையும் சாத்தியம்: வெளியான தகவல்

Share

தேங்காயின் விலை குறைவடையும் சாத்தியம்: வெளியான தகவல்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறைவடையும் என தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க (Shantha Ranatunga) தெரிவித்துள்ளார்.

ஹிரு பலய அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, தற்போது 250 ரூபாவாக உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்தி பொருட்களான தேங்காய் தூள் மற்றும் தேங்காய் பால் என்பவற்றை இறக்குமதி செய்யும் அமைச்சரவை அனுமதிப் பத்திரம் இருப்பதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தேவையை பொருத்து, குறித்த தேங்காய் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...